(18-24 pages monthly (12 issues), shipping and mailing included within India, VPP not available) 1st year & 2nd year
Babaji’s Kriya Yoga offers to initiated and non-initiated students of Yoga a monthly correspondence course which is designed to deepen your understanding of the principles and practices of Yoga. The course is designed to widen our perspective of our practice at all levels physically, vitally, mentally and spiritually. It introduces the right use of will to change the course of your life. In so doing it will help us to understand how we practice Babaji’s Kriya Yoga not only for our own benefit but also for the benefit of our families, friends and benefit of the world at large. Our practice of Hatha Yoga, Pranayama, Meditation and Mantra Japa takes us to the Self. This correspondence course is such an instrument, it is a time to begin a process of sharing Grace and Love. For one year, you will receive by mail, each month, (12 issues) a course of 18-24 page developing a specific theme, which builds on each other.
1st Year - 12 lessons:
- Grace & Living a Graceful Life
- Relationships: Walking the Path with Others
- The Power of the Mind
- Emotions: Our Adversary, Our Friend
- The Subtleties of Prana
- A Course of Meditation
- Awareness: It is Really All We Have
- Definite Methods, Tangible Results
- Yamas: The Moral Observances of Yoga
- Transcending Conditioning through Discernment
- Tapas: Bringing Intensity to our Practice
- Kriya Yoga, a Guru Yoga
2nd Year - 12 Lessons:
- The Universal Community and Our Place in it
- Complete surrender
- Kriya Yoga: the Sadhana of Action with Awareness
- Caring for the Soul
- Difficulties Along the Way
- Karma: The Cause, Part 1
- Karma: The Cause, Part 2
- The Sadhana of Concentration
- Blind Man's Bluff, A Game of Hide and Seek
- Fear, Is it Safe to Live Without It?
- Life after Death: Awakening to Knowledge
- Infinite Aum: Personal or Impersonal?
We invite you to join us in this adventure of Self-exploration and discovery. You can begin this course at any time. You will be encouraged to send us your questions, comments and insights as part of this process to:
thegracecourse@babajiskriyayoga.net
பாபாஜியின் கிரியா யோக அருட்பாடத் திரட்டு
இரு வருட அஞ்சல்வழிக் கல்வி
(ஆண்டுக் கட்டணம் ரூ 2,000/-) (18-24 பக்கங்கள் 12-மாதாந்தர வெளியீடுகள்) இந்தியாவிற்குள்- அஞ்சல் கட்டணம் இதில் அடங்கியுள்ளது. விபிபி வசதி இல்லை)
கிரியா யோகத்தில் தீட்சை பெற்ற மாணாக்கர்களுக்கும் மற்றவர்களுக்கும் யோகக் கொள்கைகள் மற்றும் அதன் பயிற்சி முறைகள் பற்றி ஆழமாக அறிந்து கொள்ள ஒரு மாதாந்தர அஞ்சல் வழிக் கல்வியை பாபாஜியின் கிரியா யோகா மையம் வழங்குகின்றது. யோகப் பயிற்சிகளைப் பற்றிய நமது கண்ணோட்டத்தை ஸ்தூல நிலை, மனோநிலை, சக்திநிலை மற்றும் ஆன்மநிலை போன்ற அனைத்து நிலைகளிலும் விரிவடையச் செய்யும் வகையில் இப்பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சரியான சங்கல்ப சக்தியினால் உங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றியமைக்கும் முறையை இது அறிமுகப்படுத்துகின்றது. பாபாஜியின் கிரியா யோகப் பயிற்சிகளினால் நாம் மட்டுமன்றி நமது குடும்பங்களும் நண்பர்களும், ஏன், உலகமே எவ்வாறு நன்மை பெறுகின்றது என்பதைப் புரிந்துகொள்ள இப்பயிற்சி உதவுகின்றது. நமது ஹடயோகப் பயிற்சிகள், பிராணாயாமம், தியானம், மந்திர ஜபம் முதலியவை நம்மை நமது ஆத்மாவை நோக்கி அழைத்துச் செல்கின்றன. அன்பையும், இறையருளையும் பகிர்ந்துகொள்ளத் துவங்க, இப்பயிற்சி ஒரு கருவியாகச் செயல்படுகின்றது.
ஒரு வருடத்திற்கு நீங்கள் மாதந்தோரும் 18-24 பக்கங்களுள்ள ஒரு கருப்பொருளைப் பற்றிய பாடத்தை அஞ்சலில் பெறுவீர்கள். ஒவ்வொரு பாடமும் அடுத்ததற்கான முன்னோடியாய் அமையும். பாடங்களின் விவரங்கள் பின்வருமாறு:
- இறையருள்
- உறவுகள்: ஆன்மீக யாத்திரையில் அனைவருடனும் நற்பயணம்
- மனத்தின் சக்தி
- உணர்ச்சிகளைக் கையாள்வது
- பிராணனின் சூட்சுமங்கள்
- தியானப் பயிற்சி
- விழிப்புணர்வு: உண்மையில் நம்மிடம் இருப்பது இது ஒன்று மட்டுமே
- திடமான முறைகள், திட்பமான முடிவுகள்
- இயமங்கள்: யோகத்தின் ஒழுக்கக் கடைப்பிடிப்புக்கள்
- பகுத்தறிவினால் பதப்படுத்தப்பட்டதைக் கடப்பது
- தவம்: நமது பயிற்சிகளில் ஒரு தீவிரத்தைக் கொண்டுவருவது
- கிரியா யோகா: ஒரு குரு-யோக பரம்பரை
இரண்டாம் வருட பாடங்களின் விவரம் பின்வருமாறு:
- உலகளாவிய சமூகத்தில் நமது பங்கு
- பூரண சரணாகதி
- கிரியா யோகா: விழிப்புணர்வுடன் கூடிய செயல் எனும் சாதனை
- ஆன்மாவைப் பேணுதல்
- பாதையில் காணும் சிரமங்கள்
- கர்மவினை: காரணிக்ள் – பகுதி 1
- கர்மவினை: காரணிகள் – பகுதி 2
- ஓர்முகப்படுத்தும் சாதனை
- கண்ணற்றவனின் பொய்மையும் கண்ணாமூச்சி ஆட்டமும்
- பய உணர்வு: அஃதின்றி வாழ்தல் நலமா?
- மரணத்திற்குப் பின் வாழ்வு: தூய அறிவிற்கு விழிப்படைதல்
- நம்மைச் சார்ந்த மற்றும் சாராத எல்லையற்ற ஓம்
நாங்கள் உங்களை இந்த சுய தேடல், கண்டுபிடிப்பு என்ற சாகசப் பயணத்திற்கு வரவேற்கின்றோம். இப்பயிற்சியை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தொடங்கலாம். இப்பயிற்சியின் ஒரு பகுதியாக உங்களது கேள்விகள், கருத்துக்கள் மற்றும் உள்ளுணர்வுகள் ஆகியவற்றை thegracecourse என்ற முகவரிக்கு அனுப்ப ஊக்குவிக்கின்றோம்.
This product was added to our catalog on Monday 04 February, 2013.