Babaji's Kriya Yoga India Shop                          

Treasure Trove of Tamil Yoga Siddha Manuscripts - Tamil

Rs. 300.00

Treasure Trove - Back
A Tamil language publication

Look Inside Book



The Treasure Trove of Tamil Yoga Siddha Manuscripts is a guide to more than thirteen thousand verses composed by Tamil Yoga Siddhars during the medieval Sangam period. These verses, available as palm leaf manuscripts, were recently collected, scanned, transcribed into modern Tamil and edited by an eminent team of scholars and manuscriptologists. The guide is a valuable resource, not only for lovers of Siddha poetry, but also for scholars, translators and researchers in the fields of Yoga and Tantra.

127 pages in the printed guide. All 13,276 verses on 1,677 pages are included in a compact disc inserted in the rear cover.

To help the reader identify each poem's subject matter, the guide contains an introduction and brief summary of each text by Dr. T.N. Pranatharthiharan, Ph.D. He is the former Professor and Head of the Tamil Research Centre, American College, Madurai, and currently the Principal of Swami Dayanandha College of Arts, Manjakkudi, Tamil Nadu. He has been the editor of the quarterly magazine Ramana Oli for 37 years. With an M.A. in Tamil, an M.A. in English an M.A. and Ph.D in Philosophy, along with the experience of translating 38 books from English to Tamil, Tamil to English and Sanskrit to English, he is well qualified to write this annotated bibliography of the poems in this collection.

The guide was edited by Dr. T.N. Ganapathy, Ph.D, the Director of the Yoga Siddha Research Project who headed the study to identify and preserve, in a computer accessible format, all of the palm leaf manuscripts of the Tamil Siddhars related to Yoga (but not medicine) from various libraries and private collections in South India. Dr. Ganapathy has also written an extensive foreword to the guide. There are additional annotations in the guide to make the contents of the manuscripts easily understandable. It is the eighth in a series of publications produced by the Project's scholars and by Babaji's Kriya Yoga Order of Acharyas, an organization founded by Marshall Govindan who also sponsored the project.

Babaji's Kriya Yoga and Publications, Inc.

St. Etienne de Bolton, Quebec, Canada

ISBN: 978-1-895383-83-6

The Yoga Siddha Research Center Publication Series No. 8

Look Inside Book





தமிழ் யோக சித்தர் ஓலைச்சுவடிப் பொக்கிஷம் என்னும் இந்த நூல் இடைச்சங்க காலத்தில் தமிழ் யோக சித்தர்கள் இயற்றிய நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு ஒரு வழிகாட்டியாகும். ஓலைச்சுவடிகளில் காணப்பட்ட இப்பாடல்களை வல்லுனர்களும் அறிஞர்களும் கொண்ட ஒரு குழு சேகரித்து, படியுரு எடுத்துத் தற்காலத் தமிழில் எழுத்துப் பெயர்த்து அதனைத் திருத்தியுள்ளனர். இந்த வழிகாட்டி சித்தர் பாடல்களில் விருப்பமுள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆராய்ச்சியாளர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் யோகம் மற்றும் தந்திரத்தில் விருப்பமுள்ளவர்களுக்கும் ஒரு அரிய பொக்கிஷமாகும்.

1,677 பக்கங்களில் 13,276 பாடல்களைக் கொண்ட குறுந்தகடு இந்நூலின் பின் அட்டையில் இணைக்கப்பட்டுள்ளது.

சித்தர் பாடல்கள் தொகுப்பைப் படிப்பவர்கள் ஒவ்வொரு பாடலின் பொருளையும் எளிதாக அறிவதற்கு முனைவர் திரு. டி.என். பிரணதார்த்திஹரன் அவர்கள் ஒவ்வொரு பாடலின் சாரத்தையும் ஒரு சுருக்கமான முன்னுரையையும் அளித்துள்ளார். அவர் தற்போது தமிழ்நாட்டில் மஞ்சங்குடியிலுள்ள சுவாமி தயானந்தா அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியின் முதல்வராக உள்ளார். இதற்கு முன் அவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ் ஆராய்ச்சி மையத்தின் தலைவராகவும் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 37 வருடங்களாக அவர் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் ரமண ஒளி என்ற பத்திரிக்கையின் பதிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். 38 நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மற்றும் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்த்த அனுபவமும் எம்.ஏ (தமிழ்), எம். ஏ (ஆங்கிலம்), எம்.ஏ. மற்றும் முனைவர் (தத்துவம்) ஆகிய பட்டங்களையும் பெற்ற திரு ஹரன் அவர்கள் இந்தப் பாடல்களுக்கு முன்னுரை எழுதுவதற்குத் தகுதிவாய்ந்தவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

தமிழ் யோக சித்தர்களின் யோகம் சார்ந்த (மருத்துவமல்லாத) பாடல்களைத் தென்னிந்தியாவிலுள்ள பல நூலகங்களிலிருந்தும் தனி நபர்களிடமிருந்தும் பெற்று அவற்றை கணினியில் படிப்பதற்கு ஏற்ற விதத்தில் மாற்றி அவற்றை அழியாமல் பாதுகாக்க்கும் இந்த முயற்சிக்குத் தலைமை தாங்கிய யோக சித்தர் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் முனைவர் திரு. டி. என். கணபதி அவர்கள் இந்த நூலைத் தொகுத்ததுடன் இதற்கு விரிவான முகவுரையையும் எழுதியுள்ளார். ஓலைச்சுவடியில் உள்ள விஷயங்களை விளக்க, பல இடங்களில் கூடுதலாகச் சில குறிப்புக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சிக்குப் பொருளுதவி செய்த, திரு மார்ஷல் கோவிந்தன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட பாபாஜியின் கிரியா யோக ஆச்சாரியர்கள் குழுமம் மற்றும் இந்த ஆய்வு முயற்சியில் ஈடுபட்ட வல்லுனர்களின் எட்டாவது வெளியீடு இது.



Look Inside Book





Add to Cart:

  • Model: B41
  • Shipping Weight: 0.75kg
  • 283 Units in Stock


This product was added to our catalog on Tuesday 26 January, 2016.

Your IP Address is: 3.15.211.107
Copyright © 2024 Babaji's Kriya Yoga